பெரம்பலூர்: எறையூர் திருமங்கலியம்மன் கோயில் அருகே தேங்கும் கழிவுநீர்: வடிகால் வசதி கோரும் பக்தர்கள்
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் திருமங்கலியம்மன் கோயில் அருகே முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.