நாட்றாம்பள்ளி: செட்டேரிடேம் பகுதியில் ஏழுயானைகள் கூட்டமாக வந்ததால் பொதுமக்கள் பீதி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரிடேம் பகுதியில் நேற்று இரவு கிருஷ்ணகிரியில் இருந்து ஏழு யானைகள் கூட்டமாக வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டி சென்றனர். தற்போது யானை கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதிக்கு கூட்டமாக சென்றுள்ளது. இருப்பினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.