விளவங்கோடு: மார்த்தாண்டத்தில் தியாகி ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் - கன்னியாகுமரி ஜவானாஸ் நிகழ்வு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் கன்னியாகுமரி ஜவானாஸ் சார்பில் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், அரசு பூங்காவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.