நிலக்கோட்டை: வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.1,12,220 பறிமுதல்
வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு புரோக்கர் வைத்து பணம் பெற்று வருவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறை DS உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வத்தலகுண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை