சாத்தான்குளம்: புளியடி மாரியம்மன் கோவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இருந்து செண்டை மேளம் முழங்க மஞ்சள் பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலில் பல்வேறு வகையான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது . இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.