பழனி: பழனியில் கடையை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
பழனியில் திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது குறித்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பாண்டிச்சேரி காரைக்கால், பச்சூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்