திருப்பத்தூர்: அண்ணா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் - போலிசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி அடுத்த நத்தம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் கவியரசு வயது 28 இவர் இன்று சுந்தரம்பள்ளி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சு.பள்ளிபட்டு ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து கந்திலி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.