முசிறி: முசிறி மேட்டு வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வு
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட 3 கி.மீ. மேட்டு வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கியது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ விக்னேஷ் இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.