தருமபுரி: தருமபுரி கபடி போட்டியில் முறைகேடு: தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் சாலை மறியல்
தருமபுரி குண்டல்பட்டியில் கபடி போட்டியில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.