காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவதற்காக தீயணைப்புத் துறையினர் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள மாவட்ட தீயணைப்பு மீட்பு நிலையத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டதால் தீயணைப்பு துறை வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றில் தீ