வாணியம்பாடி: அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் நேரில் ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 23 கோடியே 64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில் போதிய வசதி இல்லை எனக்கூறி சமூக ஆர்வலர்கள் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய வண்ணம் இருந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.