ஆரணி: காமக்கூர் ஏரிக்கரையை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்: சீரமைக்க உறுதி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காமக்கூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களை ஆட்சியர் வந்தன கார்க் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சேதமடைந்த ஏரிக்கரையை நேரில் பார்வையிட்டு, அதனைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.