பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் இரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு, பெரம்பலூர் ஆட்சியர் திரு. ப. அப்துல் ராசிக் அவர்கள் குரும்பலூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு, தாமே இரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.