அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி டுண்டி விநாயகர் கோயில்: அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமையான டுண்டி விநாயகர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து, பூர்வகுடி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.