ராதாபுரம்: நில பட்டா மாறுதலுக்கு 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் விஏஓ கைது. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை.
கூடங்குளத்தை சேர்ந்த ஐயாகண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை பாஸ்கர் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய பாஸ்கர் மனைவி விஜயா விண்ணப்பித்தார் பட்டா பெயர் மாற்றத்திற்கு விஏஓ ரூபாய் 25000 லஞ்சம் கேட்டார் இதுகுறித்து விஜயா திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்பியிடம் புகார் அளித்தார் போலீசார் நேற்று கூடங்குளம் விஏஓ அலுவலகத்தில் காத்திருந்து விஏஓவை கையும் களவுமாககைது செய்தனர் இன்று மதியம் 3 மணி அளவில் கூடங்குளத்தில் விஏஓ வீட்டையும் சோதனை செய்தனர்