திட்டக்குடி: தேமுதிக வேட்பாளரை ஆதரித்து திட்டக்குடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அதிமுக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் தலைமையில் திட்டக்குடி நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.