ஆம்பூர்: அரசு மருத்துவமனை உள்வளாகத்தில் சுற்றி திரியும் தெருநாய்களால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் மருத்துவமனையின் நுழைவாயில் மற்றும் உள்வளாகத்தில் சுற்றித் திரியும் தெருநாய்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இது குறித்த செய்தி இன்று மாலை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.