திருப்பத்தூர்: தலுக்கண் வட்டம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்-கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் அவலம்
குரிசிலாப்பட்டு பகுதியை அடுத்த தலுக்கன்வட்டம் பகுதிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது மேலும் தொடர் மலையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் உபரிநீர்கள் தரைப்பாலத்தின் வழியாக செல்கிறது .தரை பாலத்தின் வழியாக 10 கற்கும் மேற்பட்ட கிராம பகுதியில் மக்கள் இந்த தரைபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் தரைப்பாலத்தில் குறுக்கே கயிறு கட்டி அந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு தரைப் பாலத்தை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.