செங்கம்: கரிமலைப்பாடியில் தேமுதிக சார்பில் இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
தேமுதிக 22-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கரிமலைப்பாடி அங்கன்வாடி மையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொது மருத்துவம், எலும்பியல் மற்றும் கண் சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.