பெரிய கார்த்திகை முன்னிட்டு மலைக்கோட்டையில் உள்ள விளக்கு தூணில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.