கோவில்பட்டி ரயில்வே நிலையம் அருகே மூப்பன்பட்டி கம்மாய் கரையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கையில் பையுடன் நின்ற நபரை பிடித்து சோதனை செய்தனர் அப்பொழுது பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது மேலும் கடத்திய கார்த்திக் என்ற கோழி கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கஞ்சா பொருட்கள் வாங்கி வைப்பது தெரிய வந்தது இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்