பெரம்பலூர்: பெரம்பலூரில் கொண்டாட்டத்துடன் நடந்த சர்வதேச முதியோர் தின விழா!
பெரம்பலூர் தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அப்துல் ராசிக் பங்கேற்றார். மாணவ, மாணவியர் முதியவர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தியும், முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.