பழனி: 20 லட்சம் மதிப்பில் பழனி முருகன் கோயிலுக்கு தனியார் நிறுவனத்தால் பேட்டரி கார் வழங்கப்பட்டது
பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை வின்ச் நிலையம் ரோப் கார் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வர கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார் கட்டணமின்றி இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக தன்னார்வலர்களும் பக்தர்களும் இலவசமாக கோயில் நிர்வாகத்திற்கு பேட்டரி கார்களை வழங்கி வருகின்றனர். நாகா நிறுவனம் சார்பில் 20 லட்சம் மதிப்பில் 22 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது