பழனி: சூரசம்காரத்தை முன்னிட்டு சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் திரு ஆவினன்குடியில் தண்டு விரதம் மேற்கொண்டு தங்களது விரதத்தை நிறைவு செய்து வருகின்றனர்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. 6 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் திருஆவின்ன் குடி திருக்கோவிலில் முருகன் சுவாமி படத்தின் முன்னால் வாழை இலையிட்டு அதில் விளக்குகள் ஏற்றி வாழை தண்டு ,ஆரஞ்சு ,திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்து வழிபட்டு விட்டு தங்களது விரத்தை நிறைவு செய்து வருகின்றனர்.