கோவில்பட்டி பூச்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில் நாளை தீபாவளி என்பதால் கோவில்பட்டி பூச்சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு தேவை அதிகரிப்பு காரணமாக பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2000, பிச்சிப்பூ கிலோ ரூ.2500 க்கு விற்பனை செய்யப்படுகிறது