மதுரை கிழக்கு: திருப்பரங்குன்றத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்: அதிகாரிகள் புதிய உத்தரவால் குழப்பம்
திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆவணங்கள் சரியாக இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டதால் அவதிக்குள்ளாகினர். பான் கார்டு எடுக்கச் சொல்லும் அதிகாரிகளின் நடவடிக்கையால் முதியவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.