கிள்ளியூர்: குமரி முன்சிறை ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
குமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சமாகப் பெறப்பட்ட 83 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.