வால்பாறை: கருமலை எஸ்டேட் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றினர்.
வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களாக மழை இல்லாமல் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளித்து விளையாடி மகிழ்ந்தனர் இந்நிலையில் இன்று மாலை அக்காமலை வனப்பகுதிக்குள் அதிக காற்றுடன் கனமழை பெய்தது அந்த நேரத்தில் கருமலை எஸ்டேட் ஆற்றில் சீத்தா என்ற பெண் ஆற்றில் துணி துவைத்து கொண்டு இருந்தார்