திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள புஷ்பத்தூர் ஊராட்சியில் உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே சுமார் மூன்று அடி நீளம் உள்ள உடும்பு ஒன்று பக்கவாட்டுச் சுவரில் ஏறி வெளியேற வழி தெரியாமல் மாட்டிக் கொண்டது. இதை அந்த வழியே சென்றவர்கள் கல் வீசி தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மடத்துக்குளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு உதவி அலுவலர் செல்லத்துரை தலைமையில் வந்த வீரர்கள், உடும்பை லாவகமாக கீழே தள்ளி பிடித்தனர்.