போடிநாயக்கனூர்: போடியில் கடும் வறட்சி: தண்ணீர், தீவனமின்றி தவிக்கும் ஆடு, மாடுகள்
போடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தண்ணீர் மற்றும் தீவனமின்றி தவித்து வருகின்றன. நீர்நிலைகள் வறண்ட நிலையில் தீவன தட்டுப்பாட்டாலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.