அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் மக்களே கவனம்: சாலையில் கட்டுமானப் பொருட்களை வைத்தால் அபராதம்!
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் மணல், ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் அகற்றும் செலவு வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.