ஸ்ரீபெரும்புதூர்: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் ஊராட்சியில் 15வது முறையாக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 20 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அறிவித்துள்ளன. இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் விளை நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல முக்கிய வளங்கள் பாதிக்கப்படுவதை ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 1,100 நாட்க