திருப்பத்தூர்: லட்சுமி கேப் முதல் சீனிவாச கேப் வரை திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு அமைதி பேரணி
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை இன்று திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் லட்சுமி கேப் முதல் சீனிவாச கேப் வரை அமைதி பேரணி இன்று மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.