திருப்பத்தூர்: பேராம்பட்டு பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா- MLA நல்லதம்பி பங்கேற்பு
பேராம்பட்டு பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா - எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் 29.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் மற்றும் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா இன்று ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முருகன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.