தருமபுரி: தர்மபுரி: அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் உலக அயோடின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு அயோடின் சத்து மற்றும் உப்பின் அளவை குறைப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.