கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண் துறை சார்பில் மிளகாயில் நவீன பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார் இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.