சாத்தான்குளம்: சொக்கலிங்கபுரத்தில் இறந்தவரை அடக்கம் செய்வதில் பிரச்சனை காவல்துறையினர் பேச்சு வார்த்தை
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் இயற்கை எய்தினார். இந்நிலையில் அவரை அடக்கம் செய்ய செல்லும் பாதையை சிலர் அடைத்து வைத்ததாக கூறி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.