திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் சுன்னத் வல்ஜமாத் பள்ளிவாசல் சார்பில் கந்தூரி விழா நடைபெற்றது. விழாவில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து உலக நலன் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்திருந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.