கோவை வடக்கு: கோவை தடாகம் அருகே வீடுகளின் கதவை உடைத்து உணவைத் தேடிய காட்டு யானை: பொதுமக்கள் பீதி
கோவை தடாகம் அருகே உள்ள உச்சையனூர் பகுதியில், நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை விவசாயிகளின் வீடுகளின் கதவுகளை உடைத்து உணவைத் தேடியது. அடுத்தடுத்து வீடுகளுக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.