விளவங்கோடு: களியக்காவிளை: கனிமவளம் கடத்திய லாரி ஓட்டுநர் குண்டர் சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கடத்திய சிதறால் பகுதியைச் சேர்ந்த சிபின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.