பழனி: பல்வேறு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலைய அண்ணா நகர் பகுதியில் ஜெயப்பிரதா என்பவர் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து கத்தியை காண்பித்து மிரட்டி செல்போன் மற்றும் ரூ.5,500/- திருட்டில் ஈடுபட்ட வழக்கில் பழனி அடிவாரம் குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த வாய்க்கால் சாமி (எ) மின்னல் வாய்க்கால் சாமி என்பவருக்கு பழனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி வாய்க்கால் சாமி (எ) மின்னல் வாய்க்கால் சாமி என்பவருக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு.