உடையார்பாளையம்: அரியலூர்: ஆட்கள் பற்றாக்குறை - வட மாநில தொழிலாளர்கள் மூலம் நெல் நடவு தீவிரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை கொண்டு விவசாயிகள் சம்பா நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வயலில் பாட்டு பாடி வேலை செய்யும் இவர்களின் செயல் அப்பகுதி விவசாயிகளிடையே கவனம் பெற்றுள்ளது.