கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 6-ம் நாளான திருவிழாவை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன் விதி உலா நடைபெற்றது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்