தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் தீபக் என்பவர் ரீல்ஸ் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த ரவுடிகள் தீபக்கை வெட்ட தயாரான நிலையில் போலீசார் ரவுடிகளை கைது செய்தனர்.
புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபக் இவர் திருவொற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் ரவுடிகளைப் பற்றி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார் இதனை அடுத்து இவரை கொலை செய்ய சிறுவன் மற்றும் லோகேஸ்வரன், ஜெயராஜ், பார்த்திபன், நான்கு பேர் கத்தியுடன் சுற்றி உள்ளனர் இதை அறிந்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து மூன்று பேரை சிறையில் அடைத்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர்