திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் ஞானசேகர். தினமும் பால் வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் ஞானசேகர் ஆண்டுதோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழா காலங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு வழங்கி வந்தார். பின்னர் தினந்தோறும் முதியவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்து தனது வீட்டில் தினமும் காலையில் தானே தக்காளி சாதம் ,வெண்பொங்கல் ,சாம்பார் சாதம் என விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து வழங்கி வருகிறார்.