அரியலூர்: பேருந்து வசதி கோரி பக்தர்கள் சாலை மறியல் - பரபரப்பு சம்பவம்!
அரியலூர் கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால், அரியலூர் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.