நாகப்பட்டினம்: மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் 2.லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதற்கு திறமையற்ற அதிகாரிகள் தான் காரணம் விவசாயிகள் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது மாவட்டம் முழுவதும் சுமார் 2லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும் திறமையற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால் தான் தேக்கம் ஏற்பட்டதாகவும் மாவட்ட முழுவதும் அறுவடை பணிகள்நடந்து வரும் நிலையில் ஓரிரு நாளில்மிகப்பெரிய அளவில் தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்