தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிபேரலை தாக்கியது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 319 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவஞ்சலி இன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. மீன் விற்பனை கூடத்தி