பாலக்கோடு: தர்மபுரி: பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.