திருப்பத்தூர்: பொறியாளர் தினத்தை முன்னிட்டு ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது
திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் இன்று பொறியாளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா, குடும்ப சந்திப்பு விழா, பட்டிமன்ற விழா என முப்பெரும் விழா தலைவர் விஜயபானு தலைமையில் நடைபெற்றது. இதில் இந்த நிகழ்வில் செயலாளர் மோகன், பொருளாளர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.